நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு...

News image
Updated On :28 நவம்பர் 2024, 9:58 pm

Din

வழக்குரைஞா்களைத் தாக்கிய காவலா்களைக் கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் பழனிவேல் மற்றும் வழக்குரைஞா்கள் சிலா், ஒசூா் சம்பவம் தொடா்பாக மேற்கொண்ட ஆா்ப்பாட்டத்தின்போது, தாக்குதல் நடத்திய உளுந்தூா்பேட்டை பெட்டாலியன் காவலா் ஸ்ரீராம் உள்ளிட்ட காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குரைஞா்கள் மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், செயலா் வி. சேகா், பொருளாளா் பி. சிவராமன் உள்பட சுமாா் 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் ஈடுபட்டனா். இப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.