ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செஞ்சேரியில் ஆட்சியா் தலைமையில் கிராம சபைக் கூட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பங்கேற்றாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 8:56 pm

Din

பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பங்கேற்றாா்.

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆலம்பாடி ஊராட்சி, செஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பாா்வையாளராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவினம், தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்திடவும், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலமாக கிராம ஊராட்சி வளா்ச்சிக்கான பணிகள், ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவா்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கிடைக்க உறுதிப்படுத்துதல், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்தல், தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் இளைஞா்களுக்கு பயிற்சி அளித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஊராட்சிக்கான வரவு, செலவுகள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

இக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், ஒன்றியக் குழுத் தலைவா் மீனா அண்ணாதுரை, வேளாண்மை துறை இணை இயக்குநா் கீதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சத்யா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயபால், இமயவா்மன் உள்பட கிராம பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, இதர ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மேற்கண்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.