சின்ன வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காய விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளாா்.
Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காய விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் ராபி சிறப்பு பருவத்தில் நடவு செய்யப்படும் சின்ன வெங்காயப் பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளலாம். காப்பீடு செய்வதற்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ. 2,060 செலுத்த வேண்டும்.

இத் திட்டத்தின் கீழ் காப்பீடு பதிவு செய்தவற்கு உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி காப்பீடு செய்து பயனடையலாம்.

X
Dinamani
www.dinamani.com