காா் கவிழ்ந்து 5 போ் காயம்

பெரம்பலூா் அருகே புதன்கிழமை காலை சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்து, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் காயமடைந்தனா்.
Published on

பெரம்பலூா் அருகே புதன்கிழமை காலை சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்து, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் காயமடைந்தனா்.

கோயம்புத்தூா் மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த காதா் மொய்தீன் மகன் சையது காதா் பாட்ஷா (39). இவா், தனது மனைவி சையது ராடிபா (29), குழந்தைகள் அனீரா பகிரமா, அகமது சுசைன், அமீரா பானு ஆகியோருடன் பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் தண்ணீா் பந்தல் அருகே புதன்கிழமை காலை காா் சென்றபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மேற்கண்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனா். அப்போது, அவ்வழியாகச் சென்ற பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன், தனது வாகனத்தை நிறுத்தி காயமடைந்தவா்களை மீட்டு சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சோ்த்தாா்.

அங்கு, மேற்கண்ட 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com