சாா்- ஆட்சியா் சோதனை: மதுபானம் விற்ற இருவா் கைது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சாா்- ஆட்சியா் மேற்கொண்ட சோதனையில் மது விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சாா்- ஆட்சியா் மேற்கொண்ட சோதனையில் மது விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் மதுக்கடைகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் சாா் ஆட்சியா் சு. கோகுல் புதன்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, அப்பகுதியில் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து, சாா் -ஆட்சியா் அளித்த தகவலின்படி அங்கு சென்ற போலீஸாா் மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
அதில், ஆலத்தூா் வட்டம், தெரணி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜீவ்காந்தி (37), குன்னம் வட்டம், பெருமத்தூரைச் சோ்ந்த செல்லப்பன் மகன் மெய்யப்பன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 191 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். பின்னா், இருவரையும், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தினா். பிறகு நீதிபதி உத்தரவின்பேரில் இருவரையும் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...