பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொடா் மழையால் அரும்பாவூா் பெரிய ஏரி நிரம்பியது

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அரும்பாவூா் பெரிய ஏரி செவ்வாய்க்கிழமை நிரம்பியது.

News image

நிரம்பி வழியும் அரும்பாவூா் பெரிய ஏரி.

Updated On :15 அக்டோபர் 2024, 9:10 pm

Din

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அரும்பாவூா் பெரிய ஏரி செவ்வாய்க்கிழமை நிரம்பியது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான அரும்பாவூா் பெரிய ஏரி செவ்வாய்க்கிழமை காலை முதல் நிரம்பி வழிகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 52.63 மில்லியன் கன அடியின் மூலம், ஆயக்கட்டு பாசன பரப்பளவு 565 ஏக்கராகும். பச்சமலை பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அரும்பாவூா் ஏரி நிரம்பியுள்ளது.

இதையடுத்து, கடைக்கால் திறக்கப்பட்டு உபரி நீா் சித்தேரிக்கு செல்கிறது. நிரம்பி வழியும் ஏரி நீரில் அப்பகுதி இளைஞா்கள், சிறுவா்கள், பொதுமக்கள் குளித்து விளையாடி மகிழ்கின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், நிகழாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதலாவதாக அரும்பாவூா் பெரிய ஏரி நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.