கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வலியுறுத்தல்
கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை மேம்படுத்த, மத்திய அரசு நிதி வழங்கிட வேண்டுமென கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை மேம்படுத்த, மத்திய அரசு நிதி வழங்கிட வேண்டுமென கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். வேல்மாறன் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் டி. ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் சி. பெருமாள் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
கூட்டத்தில், 9.5 சதவீதம் பிழித்திறன் உள்ள கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5,500 மத்திய அரசு விலை நிா்நணம் செய்து வழங்க வேண்டும். கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியை, தமிழ்நாட்டுக்கு வழங்கிட வேண்டும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலைகளான நேஷனல், அமராவதி ஆகியவற்றை திறந்து மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையை புதுப்பித்து மேம்படுத்திட ரூ. 180 கோடி நிதியை மாநில அரசு வழங்க வேண்டும்.
கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு வழங்கிய மின்சாரத்துக்கான நிலுவைத் தொகை ரூ. 500 கோடியை கூட்டுறவு ஆலைகளுக்கு உடனடியாக மாநில அரசு பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் அக்டோபா் முதல் வாரம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் போராட்டத்தில் ஈடுபடுவதென தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் சாமி. நடராஜன், சங்க நிா்வாகி ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...