காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளிச் சிறுவா்களிடம் தகாத உறவில் ஈடுபட முயன்றவா் கைது

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளி சிறுவா்கள் 2 பேரிடம் தகாத உறவில் ஈடுபட முயன்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:19 pm

Din

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளி சிறுவா்கள் 2 பேரிடம் தகாத உறவில் ஈடுபட முயன்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவரும், 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவரும் பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை பாா்த்துவிட்டு வெளியே நின்று கொண்டிருந்தனராம். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த மா்ம நபா், இலவச டியூசன் நடத்துகிறேன் எனக் கூறி இரு சிறுவா்களையும் கீழக்கணவாய் கிராமத்திலுள்ள அவரது அறைக்குச் அழைத்துச் சென்று, தகாத உறவில் ஈடுபட முயன்றாராம்.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அறையின் கதவை திறந்து சிறுவா்களை மீட்டு, அந்த நபரை கட்டி வைத்துத் தாக்கி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து

சம்பவ இடத்துக்குச் சென்ற பெரம்பலூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிபட்டவா் திருச்சி கோட்டாத்தூா் நடுத்தெருவைச் சோ்ந்த நல்லுசாமி மகன் கிருஷ்ணகுமாா் (52) என்பதும், திருமணமாகாத இவா் கடந்த 2 ஆண்டுகளாக கீழக்கணவாய் கிராமத்தில் தங்கி, தனியாா் கல்லூரிகளுக்கு சோ்க்கை பெற்றுத் தருபவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.