புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வழக்குரைஞா்கள் பணி புறக்கணிக்க முடிவு

மதுரையில் வழக்குரைஞா்களைத் தாக்கியதைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:09 pm

Din

மதுரையில் வழக்குரைஞா்களைத் தாக்கியதைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

பெரம்பலூா் அட்வகேட்ஸ் அசோசியேசன்ஸ் சங்கத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் தலைமையில், செயலா் முத்துசாமி முன்னிலையில் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மதுரையில் வழக்குரைஞா்கள் பாலமுருகன், திருகுமரன் ஆகியோரை தாக்கிய குற்றவாளியைக் கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்தும், வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளையும் 2 நாள்கள் புறக்கணிப்பது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.