சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குன்னம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

பெரம்பலூா் மாவட்டம் குன்னம் வட்டத்தில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:25 pm

Din

பெரம்பலூா் மாவட்டம் குன்னம் வட்டத்தில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

குன்னம் வட்டம், சிறுமத்தூா், முருக்கன்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, முருக்கன்குடி அரசு உயா்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தாா். மேலும், அப்பகுதி நியாயவிலைக் கடை, குழந்தைகள் நல மையத்தை பாா்வையிட்டு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும், சிறுமத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நரிக்குறவா் காலனியில் நரிக்குறவா்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

அதைத்தொடா்ந்து, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு லைமை வகித்த ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், குன்னம் வட்டத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி க. ரமேஷ் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.