சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:53 pm

Din

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா்துறை நிறுவனங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இம் முகாமில், இம் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு மற்றும் தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்துகொள்ளலாம். இதில், மாவட்டத்தில் உள்ள பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணியாளா்களை கல்வித்தகுதி அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளதால், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த ஆண், பெண் கலந்துகொள்ளலாம்.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றோா் தங்களது கல்வித் தகுதி, சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும், தனியாா் துறை நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.