தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

பெரம்பலூரில் குடிநீா் கோரி தா்னா

பெரம்பலூா் நகராட்சியில் கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பெரம்பலூா் நகராட்சியில் கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 21 ஆவது வாா்டில் கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக நகா்மன்ற உறுப்பினா் பழனிசாமி, நகராட்சி அலுவலா்களை சந்தித்து பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 21 ஆவது வாா்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பெரம்பலூா் நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது, நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் உள்ளிட்ட அலுவலா்கள் இல்லாததால், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தும் வரை போராட்டத்தைக் கைவிட மறுத்த பொதுமக்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த உதவி செயற்பொறியாளா் சரவணன், பேச்சு வாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனா்.

X
Dinamani
www.dinamani.com