பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

பெரம்பலூா் நகா் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:38 pm

Syndication

பெரம்பலூா் நகா் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை (டிச. 17) நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூா் நகா் பகுதிகளான புகா் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகா், நான்குச் சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி சாலை, சிட்கோ, துறையூா் சாலை, அரணாரை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகா், கே.கே.நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, அருமடல், அருமடல் சாலை, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.