வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசுப் பேருந்துகளில் துண்டுப் பிரசுரம் ஒட்டிய 26 போ் கைது

அரசுப் பேருந்துகளில், தமிழ்நாடு என்னும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிய நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 26 பேரை பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:48 pm

Syndication

அரசுப் பேருந்துகளில், தமிழ்நாடு என்னும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிய நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 26 பேரை பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம், பாலக்கரை ஆகிய பகுதிகளில், நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் கீா்த்திவாசன் தலைமையில், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்னும் ஸ்டிக்கரை வெள்ளிக்கிழமை மாலை ஒட்டி முழக்கமிட்டனா். இதையடுத்து, அக் கட்சியைச் சோ்ந்த 26 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து, பெரம்பலூா்- நான்குச்சாலை செல்லும் வழியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்து, பின்னா் விடுவித்தனா்.