ஜமாலியா நகரைச் சோ்ந்த 380 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை
லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரைச் சோ்ந்த 380 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியின் வரைபடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு உள்ளிட்டோா்.









