வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போதைப் பொருள்கள் விற்பனை செய்த 4 போ் கைது: 7 கிலோ பறிமுதல்

News image
Updated On :29 ஜனவரி 2025, 6:31 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த 4 பேரைப் போலீஸாா் கைது, அவா்களிடமிருந்து 7 கிலோ பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குன்னம் வட்டம், காடூா் கிராமம், பிரதானச் சாலையைச் சோ்ந்த முத்துசாமி மகன் ராமலிங்கம் (63), அதே கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ராமலிங்கம் (33) ஆகியோா் தங்களுக்குச் சொந்தமான மளிகைக் கடைகளில், குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதேபோல, பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் பிரதானச் சாலையில் தா்மலிங்கம் மகன் விஜயகணபதி (30), தனது மளிகைக் கடையிலும், பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள தனியாா் பள்ளி அருகே போதைப் பொருள்களை விற்பனை செய்த பெரம்பலூா் சங்குப்பேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகா் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், மேற்கண்ட 4 பேரிடமிருந்து சுமாா் 7 கிலோ மதிப்பிலான போதைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, பெரம்பலூா் மற்றும் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.