பெரம்பலூர்
காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருவாரூா் காவல் துறையைக் கண்டித்து, பெரம்பலூரில் 3 +1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருவாரூா் காவல் துறையைக் கண்டித்து, பெரம்பலூரில் 3 +1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். திருவாரூரில் ஆட்டோ ஓட்டுநா்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது செய்த திருவாரூா் மாவட்டக் காவல்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதில், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி, பொறுப்பாளா்கள் கிருஷ்ணகுமாா், கிருஷ்ணசாமி, சரவணன், பரமசிவம், பெரியசாமி, சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
