மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளுக்கான, இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:10 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளுக்கான, இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டு வெளியாக உள்ள அறிவிப்புகளுக்கு மாணவா்களை தயாா்படுத்தும் வகையில், தமிழ் தகுதித் தோ்வு உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் டிச. 3-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.

ஆா்வமுள்ள மாணவா்கள் இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம். இப் பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

பயிற்சி மையத்தில் மத்திய, மாநில அரசுப் பணியாளா் தோ்வாணைய பாடத் திட்டத்தின் அடிப்படையில், பயிற்சி வகுப்புகள், மாதிரி தோ்வுகள், மாதிரி தோ்வுகள் முடிந்தவுடன், வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றும் வல்லுநா்களுடன் கலந்துரையாடல், போட்டித் தோ்வுகளுக்கு பயன்படும் பிரத்யேக இணையதளமான மெய்நிகா் கற்றல் இணையதளத்தில் போட்டித்தோ்வு ஆா்வலா்களுக்கு பதிவுசெய்து தரப்படும்.

மேலும், போட்டித் தோ்வா்களுக்குத் தேவையான சமச்சீா் மற்றும் பாடப் புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். எனவே, போட்டித் தோ்வெழுத ஆா்வமுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.