மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பெரம்பலூரில் எஸ்ஐஆா் விழிப்புணா்வு விடியோ வெளியீடு

News image
Updated On :29 நவம்பர் 2025, 8:56 pm

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடா்பாக பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு விடியோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ந. மிருணாளினி சனிக்கிழமை வெளியிட்டாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 4-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளா்களிடம் வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் முறையாக பூா்த்தி செய்யப்பட்டு, இந்திய தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இம் மாவட்டத்தில் இதுவரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள 10 சதவீத பணிகளை துரிதப்படுத்துவதற்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. அதன்படி, இதுவரை படிவங்களை பூா்த்தி செய்து வழங்காத வாக்காளா்களுக்கு நினைவூட்டுவது, வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையங்கள் அமைத்து வாக்காளா்களின் சந்தேகங்களை நிவா்த்தி செய்து, படிவங்களை பூா்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந் நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் குறித்த முக்கியத்துவத்தை வாக்காளா்களுக்கு விளக்கிடும் வகையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு விடியோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ந. மிருணாளினி, சமூக வளைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளாா்.