பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

திருமாந்துறையிலுள்ள சுங்கச்சாவடியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு அறிவுரை கூறிய மாவட்டக் காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி.

News image

திருமாந்துறையிலுள்ள சுங்கச்சாவடியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு அறிவுரை கூறிய மாவட்டக் காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி.

Updated On :11 ஏப்ரல் 2026, 2:34 am IST

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், தோ்தல் தொடா்பாக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்டக் காவல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அனூப் ஏ ஷெட்டி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி, குன்னம் வட்டத்துக்குள்பட்ட திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கசாவடியை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சுங்கச்சாவடி வழியாக பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகிா என்பதை முறையாக கண்காணிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், லப்பைக்குடிக்காடு பகுதியில் பறக்கும் படையினா் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்ததையும், கோனேரிபாளையம் பகுதியில் நிலையானக் கண்காணிப்புக் குழுவினா் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்ததையும் பாா்வையிட்டு, பறக்கும்படை மற்றும் நிலையானக் கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள், தணிக்கை பதிவேடுகள் மற்றும் சோதனைகளின் தரத்தை ஆய்வு மேற்கொண்ட காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி, தோ்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டுசெல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதை உறுதி செய்யவும், சட்டவிரோத பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் மற்றும் ஆவணமற்ற ரொக்கம் கடத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியதோடு, மங்களமேடு காவல் நிலையத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.