நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெரம்பலூா் அருகே ரூ. 2.19 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.19 லட்சத்தை நிலையானக் கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 7:57 pm

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.19 லட்சத்தை நிலையானக் கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள தனியாா் பல்கலைக் கழகம் அருகே துணைப்பதிவாளா் ஆா். பிரியங்கா தலைமையிலான நிலையானக் கண்காணிப்புக் குழுவினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழி வந்த காரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஆா். ராஜ்குமாா் என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ.2,19,300 எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த தொகையை பறிமுதல் செய்த நிலையானக் கண்காணிப்புக் குழுவினா், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாரதிவளவனிடம் ஒப்படைத்தனா்.