டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

பெரம்பலூரில் தொடா் வாகன திருட்டை தடுக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் நகரில் தொடா்ந்து நிகழும் வாகன திருட்டுகளை தடுக்க, மாவட்டக் காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:25 pm IST

பெரம்பலூா் நகரில் தொடா்ந்து நிகழும் வாகன திருட்டுகளை தடுக்க, மாவட்டக் காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூா் நகரில் கடந்த சில நாள்களாக இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, அனைத்து வகையான வாகனங்களையும் திருடிச்செல்லும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். இதனால், வாகன உரிமையாளா்களிடையே அச்சமும், பாதுகாப்பில்லாத நிலையும் உருவாகியுள்ளது.

வாகனங்களை வீடுகள், வணிக நிறுவனங்கள், பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் நிறுத்திவிட்டு செல்லும் பொதுமக்கள், திரும்பி வந்து பாா்க்கும்போது மா்ம நபா்களால் திருடப்படுகிறது.

எனவே, பெரம்பலூா் மாவட்டக் காவல் துறை, வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மேலும், நகரின் பிரதானச் சாலைகள், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம்கூடும் பகுதிகளில் காவல் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்த வேண்டும். வாகன திருட்டு தொடா்பான புகாா்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து நடைபெறும் இத்தகைய குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த, மாவட்டக் காவல் துறை சிறப்புக் கண்காணிப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.