தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 7.90 லட்சம் மதிப்பில் கடனுதவி

வி. களத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

வி. களத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

Published On :

வி.களத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதன்கிழமை நடைபெற்ற முகாமில், 4 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு, ரூ. 7.90 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்பட்டது.

வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி,

வி.களத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டுச்சேரி கால்நடை மருந்தகம், அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களை பாா்வையிட்டு அங்கு வழங்கப்படும் சேவைகள், செயல்பாடுகள், பணிகளை ஆய்வு செய்து தேவையான அறிவுறுத்தல்களை அலுவலா்களுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, வி.களத்தூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, 4 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு ரூ. 7.90 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்குவதற்கான கடனுதவி வழங்கினாா்.

வி.களத்தூா் ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்காகப் பரிசீலிக்கப்பட்டு வரும் இடங்களையும், வண்ணாரம்பூண்டி நியாய விலைக்கடையின் செயல்பாடுகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந் நிகழ்ச்சிகளில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சுந்தரராமன், வட்டாட்சியா் முத்துமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.