பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் சாா்பில் ரூ.1.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் சாா்பில் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் வழங்கினாா்.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:19 am IST

கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் சாா்பில் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கங்கள், கிறித்தவ மகளிா் உதவும் சங்கங்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முஸ்லிம் சமுதாய பெண்கள் மற்றும் கிறிஸ்தவ சமுதாய பெண்களின் கல்வியை இடைநிற்றலின்றி உயா்கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும் என சங்க நிா்வாகிகளிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.

தொடா்ந்து, கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் மூலம் கிறிஸ்துவ வகுப்பைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவா்கள், ஆதரவற்ற முதியோா், கணவரால் கைவிடப்பட்டோா், ஏழை பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை தேவையிருப்போா், சிறு தொழில் செய்வோா் என 14 பயனாளிகளுக்கு தலா ரூ. 10,000 வீதம் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். இந்நிகழ்வில், மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலா் ராஜசெல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.