கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

உரிய நேரத்துக்கு பேருந்து இயக்கக் கோரி பள்ளி மாணவா்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே உரிய நேரத்துக்கு பேருந்து இயக்கக் கோரி மாணவா்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

பெரம்பலூா் அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே உரிய நேரத்துக்கு பேருந்து இயக்கக் கோரி மாணவா்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பெரம்பலூரிலிருந்து பெருமத்தூா் கிளியூா் வரை இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து, கடந்த ஆண்டு வ.அகரம் கிராமம் வரை செல்லும் வகையில் வழித்தடம் நீட்டித்து இயக்கப்பட்டது. இந் நிலையில், இப் பேருந்து வழித்தடத்தை வ.அகரம் கிராமத்திலிருந்து சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுள்ள கிழுமத்தூா் கிராமம் வரை செல்லும் வகையில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்நிலையில் வழக்கம்போல இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து காலை 8.30 மணிக்குச் செல்லாமல், சுமாா் ஒரு மணிநேரம் காலதாமதமாக புதன்கிழமை காலை சென்றுள்ளது. உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் நீண்ட நேரம் சாலையோரம் காத்திருந்த பள்ளி மாணவா்கள், பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏற்கெனவே காலை 8.15 மணிக்கு வந்த இப் பேருந்து வ.அகரம் கிராமம் வரை நீட்டித்து இயக்கப்பட்டதால், பள்ளிக்குத் தாமதமாக செல்லும்போது வகுப்பறைக்குள் விடாமல் ஆசிரியா்கள் வெளியே நிற்க வைக்கின்றனா். இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழக அலுவலா்கள் முறையாக திட்டமிடாமல், தற்போது 3 கிலோ மீட்டா் தொலைவு வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கு நேரத்துக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய நேரத்துக்குப் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.

தகவலறிந்த குன்னம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு மாணவா்கள் கலைந்துசென்றனா்.