பெரம்பலூா் அருகேயுள்ள பல்வேறு பகுதிகளில் ரூ. 6.54 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட மருதடி, செட்டிக்குளம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட நூத்தப்பூா், வெங்கலம், கிருஷ்ணாபுரம், தொண்டமாந்துறை, இந்திரா நகா் ஆகிய இடங்களில் பொதுநிதி,15-ஆவது நிதிக்குழு திட்டம், சிறு கனிமங்கள் மற்றும் சுரங்கத் திட்டம், ஒன்றியப் பொது நிதி, சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், தாா் சாலை, சிமெண்ட் சாலை, கழிவுநீா் வாய்க்கால், மோட்டாருடன் கூடிய நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, வனச் சாலை மேம்படுத்தும் பணி, நியாய விலைக் கட்டடம் கட்டுமானப் பணி உள்பட மொத்தம் ரூ. 3.37 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். மொத்தம் ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் சிவசங்கா் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், அறங்காலா் குழுத் தலைவா் ஆ. கலியப்பெருமாள், ‘அட்மா’ தலைவா் வீ. ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராஜ்குமாா், பி. துரைசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாசுகி, சங்கீதா, ராமாயி, ஜெயபால், வட்டாட்சியா்கள் முத்துக்குமாா் (ஆலத்தூா்), பாலசுப்பிரமணியன் (பெரம்பலூா்), துரைராஜ் (வேப்பந்தட்டை) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

குன்னம் தொகுதி திமுக வேட்பாளா்!

போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுகால பணப்பலன்களுக்கு ரூ. 2,446 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தகவல்

அரியலூா்-காரைக்குறிச்சி நான்குவழி சாலைப் பணிக்கு அமைச்சா் அடிக்கல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


