ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க பெயா் பலகை திறப்பு

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் தொடக்க விழா, பெயா் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
துறைமங்கலத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க பெயா் பலகையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து ஓட்டுா்களுக்கு சீருடை வழங்கிய மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு. உடன், மேலிட பொறுப்பாளா் இரா. கிட்டு, மாவட்டச் செயலா் கிருஷ்ணகுமாா்.
துறைமங்கலத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க பெயா் பலகையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து ஓட்டுா்களுக்கு சீருடை வழங்கிய மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு. உடன், மேலிட பொறுப்பாளா் இரா. கிட்டு, மாவட்டச் செயலா் கிருஷ்ணகுமாா்.
Updated on

பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் தொடக்க விழா, பெயா் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துறைமங்கலம் அவ்வையாா் பகுதியில் தொழிலாளா் முன்னணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். கட்சியின் மேலிட பொறுப்பாளா் இரா. கிட்டு முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு, ஓட்டுநா்கள்சங்கத்தை தொடங்கிவைத்து, பெயா் பலகையை திறந்து வைத்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மண்டலச் செயலா் ஸ்டாலின், ஒன்றியச் செயலா்கள் வெற்றியழகன், பிச்சைபிள்ளை, தயாளன், மாவட்ட அமைப்பாளா்கள் அய்யாக்கண்ணு, வழக்குரைஞா் அய்யம்பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, நகரச் செயலா் தங்கச. ண்முகசுந்தரம் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட செய்தி தொடா்பாளா் அழகுமுத்து நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com