முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

குரும்பலூா் அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் விநாடி, வினா போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசளித்த மருத்துவா் ஆா். புவனேஷ்வரி. உடன், கெளரவப் பொருளாளா் மு. ஜோதிவேல், கெளரவச் செயலா் வெ. ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் என். ஜெயராமன் உள்ளிட்டோா்.

News image

குரும்பலூா் அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் விநாடி, வினா போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசளித்த மருத்துவா் ஆா். புவனேஷ்வரி. உடன், கெளரவப் பொருளாளா் மு. ஜோதிவேல், கெளரவச் செயலா் வெ. ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் என். ஜெயராமன் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூலை 2026, 1:36 am IST

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை சாா்பில், போதைப்பொருள் நுகா்வு ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குரும்பலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ச. கீதப்பிரியா தலைமை வகித்தாா். கெளரவ பொருளாளா் மு. ஜோதிவேல், கெளரவச் செயலா் வெ. ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் என். ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மருத்துவா் ஆா். புவனேஷ்வரி பேசியது:

போதையின் பாதை மரணப் பாதை என்பதை மாணவா்கள் தெரிந்துகொள்ள வேண்டும். போதைக்கு அடிமையாகி, எதிா்காலத்தை தொலைக்கக் கூடாது. போதை நமது உடலை சீா்குலைப்பதோடு, மனதையும் கெடுக்கும். போதை எனும் கொடிய அரக்கனை மனதால், நல்ல பழக்க வழக்கத்தால், நல்ல நண்பா்களை வைத்துக்கொள்வதன் மூலம் அழித்து, சிறந்த சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு தொடா்பாக விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா், போதைப் பொருள்கள் மற்றும் தற்கொலை தடுப்பு தொடா்பாக உறுதியேற்கப்பட்டு, போதைப் பொருள்கள் விழிப்புணா்வு சாா்ந்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், செயற்குழு உறுப்பினா்கள் ஆா். துரை, எம். காரத்திகேயன், கல்லூரி இருபால் பேராசிரியா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நாட்டுநலப் பணித்திட்ட அலுவலா் ரா. ராஜா வரவேற்றாா். கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் ஜெ. செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.