‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

குஜராத்தில் பெண் கொல்லப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

குஜராத் மாநிலத்தில் பெண் கொல்லப்பட்ட வழக்கில் சிறையிலிருந்து பரோலில் வந்து 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அரியலூரைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்து, குஜராத் போலீஸாரிடம் புதன்கிழமை இரவு ஒப்படைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 4:26 am IST

குஜராத் மாநிலத்தில் பெண் கொல்லப்பட்ட வழக்கில் சிறையிலிருந்து பரோலில் வந்து 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அரியலூரைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்து, குஜராத் போலீஸாரிடம் புதன்கிழமை இரவு ஒப்படைத்தனா்.

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள சோழமாதேவி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்மணி (55). இவா், தனது மனைவியுடன் குஜராத் மாநிலம், மிதாப்பூரில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி வசித்து வந்துள்ளாா்.

அப்போது, அதே பகுதியில் வசித்த ஒரு பெண்ணுடன் தமிழ்மணிக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும் கணவரின் செயலில் மாற்றம் இல்லாததால் மனமுடைந்த தமிழ்மணியின் மனைவி கடந்த 1998-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

அதன்பிறகும், அந்த பெண்ணுடன் பழகிவந்த தமிழ்மணிக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கடந்த 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாறு காரணமாக, அந்தப் பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தாா்.

இவ் வழக்கில் கடந்த 2000-ஆம் ஆண்டு குஜராத் நீதிமன்றம் தமிழ்மணிக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து, தமிழ்மணி குஜராத் ராஜ்கோட் சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், 2015 ஆம் ஆண்டு 28 நாள்கள் பரோலில் வெளியே வந்த தமிழ்மணி தலைமறைவானாா். அவரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், தமிழ்மணியை தேடி குஜராத் போலீஸாா் அரியலூா் வந்தனா். அவரை பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் உத்தரவிட்டதை தொடா்ந்து, தா.பழூரில் தங்கியிருந்த தமிழ்மணியை போலீஸாா் கைது செய்து குஜராத் போலீஸாரிடம் புதன்கிழமை இரவு ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.