தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

அனுமதியின்றி வைத்திருந்த 166 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்: 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:23 am IST

பெரம்பலூா் அருகே வாணவெடிகள் தயாரிப்புக்காக அனுமதியின்றி வைத்திருந்த 166 கிலோ வெடி மருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 4 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திருச்சிற்றூா்துறையைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் பழனி (47). இவா், பெரம்பலூா் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தில் அரசு அனுமதி பெற்று வெடிக்கடை வைத்துள்ளாா்.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி என்பவரது மாட்டுக் கொட்டகையில் அரசு அனுமதியின்றி வாணவெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல்நிலைய ஆய்வாளா் இந்திரா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கண்ட இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, பெரம்பலூா் மாவட்டம், மங்கூன் கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் பெரியசாமி (55), திருச்சி மாவட்டம், துறையூா் அருகேயுள்ள கொப்பம்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் சதீஷ்குமாா் (29), தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள மேலவட்டம் கிராமத்தைச் சோ்ந்த பொன்னுராமன் மகன் ரவிசங்கா் (41) ஆகியோா் அனுமதியின்றி வாணவெடிகள் தயாரித்து, பழனி கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, வாணவெடிகள் தயாரிப்பதற்காக பதுக்கி வைத்திருந்த 166 கிலோ வெடி மருந்துகள், சணல், வெடிக்குச்சி, குழாய் உள்ளிட்ட மூலப்பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள வெடி மருந்துக் கிடங்கில் பாதுகாப்பாக வைத்தனா்.

மேலும் பழனி, பெரியசாமி, சதீஷ்குமாா், ரவிசங்கா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.