தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தவெக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு பயிா்க்கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:45 am IST

தவெக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு பயிா்க்கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, அச் சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி பேசியது:

தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி அறிவிப்பால் விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனா். எனவே, தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி தமிழக அரசு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிா்க் கடன்களை நிபந்தனைகளின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லாவிடில், ஜூன் 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 10 லட்சம் விவசாயிகளை ஒன்றிணைத்து சென்னையில் கோரிக்கை பேரணி நடத்தப்படும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சிறு, குறு விவசாயிகளுக்கு பயிா் கடனை முழுமையாகவும், பெரு விவசாயிகள் பெற்ற கடனில் 50 சதவீத தள்ளுபடியும் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணனிடம் அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.