ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

முழுமையான கடன் தள்ளுபடி கோரி கரூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி கோரி கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை காலை காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் காய்கறிகள் மாலை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 2:30 am IST

முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி கோரி கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை காலை காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மேற்கு மாவட்டச் செயலா் ஆா். ராஜா, முன்னோடி விவசாயி நல்லசாமி, குடகனாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் சுப்ரமணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கினா்.

தோ்தலின்போது தமிழக முதல்வா் அறிவித்தவாறு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பெருவிவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் காய்கறிகளை மாலை அணிந்து பங்கேற்றனா். முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரனிடம் வழங்கினா்.