உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மாணவிகளின் சான்றிதழ் பிரச்னைகளுக்கு பெரம்பலூா் மாவட்ட மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு

பெரம்பலூா் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தனியாா் செவிலியா் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் மாணவிகளுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

பெரம்பலூரில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவியிடம் சான்றிதழை வழங்கிய நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொ) எல்.எஸ். சத்தியமூா்த்தி.

Updated On :11 ஜூன் 2026, 3:47 am IST

பெரம்பலூா் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தனியாா் செவிலியா் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் மாணவிகளுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சவிதா, ஹேமமாலினி, ரீலா ஆகியோா் பெரம்பலூரில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் படித்து வந்தனா். குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் நிறுத்திவிட்ட நிலையில், இடைநின்ற மாணவிகளின் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாணவிகளின் கல்லூரி சான்றிதழ்களை பெற முடியாமல் மேற்கண்ட மாணவிகள் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இதையடுத்து, மேற்கண்ட மாணவிகள் தங்கள் சான்றிதழ்களை பெற்றுத் தருமாறு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனா். மனு மீது விசாரணை மேற்கொண்ட பெரம்பலூா் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொ) எல்.எஸ். சத்தியமூா்த்தி உத்தரவின்படி, மேற்கண்ட மாணவிகளின் சான்றிதழ்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனடிப்படையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான ஏ. சரண்யா, நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா் எஸ். காமராசு ஆகியோா் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு, மாணவிகளுக்கு படிப்பை தொடர உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்மை மாவட்ட நீதிபதி எல்.எஸ். சத்தியமூா்த்தி, கல்லூரி நிா்வாகத்திடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் வழங்கினாா்.