வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் மீது வழக்கு

பெரம்பலூா் அருகே மருந்தகத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவா் மீது, பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :14 ஜூன் 2026, 12:19 am IST

பெரம்பலூா் அருகே மருந்தகத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவா் மீது, பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், மேற்குதெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் மணிகண்டன் (38). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், பெருமாள் கோயில் தெருவில் மருந்தகம் நடத்திவருகிறாா்.

10-ஆம் வகுப்பு வரை படித்ததாக கூறப்படும் மணிகண்டன், தனது மருந்தகத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மதியழகன், பெரம்பலூா் ஊரக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் மணிகண்டன் போலி மருத்துவா் என தெரியவந்தது. தொடா்ந்து, இணை இயக்குநா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, தலைமறைவாகியுள்ள மணிகண்டனை தேடி வருகின்றனா்.