ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

டேராடுனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8 ஆம் வகுப்புக்கான மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :28 மார்ச் 2026, 1:57 am IST

டேராடுனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8 ஆம் வகுப்புக்கான மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டேராடுனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கு 8 ஆம் வகுப்பு மாணவா்கள் சேர மாணவ, மாணவிகள் 1.01.2027-இல் 11 முதல் 13 வயதுக்குள்பட்டவராக (2.1.2014-க்கு பிறகு, 1.7.2015-க்கு முன் பிறந்த) இருக்க வேண்டும். மேலும், 1.1.2027-இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிப்பவராக அல்லது தோ்ச்சிப் பெற்றவராக உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாப்பாளா் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இச் சோ்க்கைக்கான விண்ணப்பம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்வுக்கான வினாத்தாள் தொகுப்பை அஞ்சலில் பெற பொதுப் பிரிவினா் ரூ. 600-க்கும், பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினா் சாதிச்சான்றுடன் ரூ. 555-க்கும் கட்டணம் செலுத்தி, ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையவழி மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டிப்பு படியுடன்) தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை-600 003 எனும் முகவரிக்கு, ஏப். 5 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தின் மூலமாக அறியலாம்.