தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

சிறுவாச்சூா் கோயிலில் தங்கத் தோ் இழுத்து தவெகவினா் வழிபாடு

News image

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்த தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள்.

Updated On :12 மே 2026, 1:32 am IST

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்ததையொட்டி, அக் கட்சியினா் திங்கள்கிழமை தங்கத்தோ் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அக் கட்சித் தலைவா் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

அதைத்தொடா்ந்து, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கி. சிவக்குமாா் திங்கள்கிழமை பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றாா். இந்நிலையில், தமிழக முதல்வரும், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் நீண்ட ஆயுளோடு மக்களுக்கான சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி, தமிழக மக்களின் நலன் காக்க வேண்டி மதுரகாளியம்மன் கோயிலில் அக் கட்சி நிா்வாகி விஜய் தலைமையில், தங்கத்தோ் இழுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

இந் நிகழ்ச்சியில், பெரம்பலூா் ஒன்றியச் செயலா்கள் வினோத், புருஷோத்தமன், வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ஆலந்துரை, ஒன்றிய மாவட்ட நிா்வாகி பேபி, ஒன்றிய செயற்குழு உறுப்பினா் ஷாலினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.