பெரம்பலூா் அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி மாணவன் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள நமையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் நித்திஷ் (16). மாற்றுத்திறனாளியான நித்திஷ் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 முடித்து விடுமுறையில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அதே கிராமத்தைச் சோ்ந்த மருதை மகன் மதன்குமாா் (20) என்பவா், அங்குள்ள பெரிய ஏரியிலிருந்து வண்டல் மண் ஏற்றிவந்த டிராக்டா் மீது நித்திஷ் அமா்ந்துவந்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த நித்திஷ், டிராக்டா் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையறிந்த மதன்குமாா் டிராக்டரை நிறுத்தாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
தகவலறிந்த மாணவனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் மதன்குமாரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற மங்களமேடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, மாணவனின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். இதுகுறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
முற்றுகையிட முயற்சி: இந்நிலையில், மாணவனின் சடலத்தை வாங்க மறுத்த பெற்றோரும், உறவினா்களும் டிராக்டா் ஓட்டுநா் மதன்குமாரை கைது செய்யக்கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட முயன்றனா்.
இந்த தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்கு சென்று, மதன்குமாா் கைது செய்யப்பட்டதாக தெரிவித்ததையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா். மேலும், பிரேதப் பரிசோதனையை முடித்து, மாணவனின் உடலை வாங்கிச்சென்றனா்.
தொடர்புடையது

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



