வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்: அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

எஸ்ஐஆர் - கோப்புப் படம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வாக்காளா் படடியா் திருத்தப் பணிகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டவாக்காளா் பட்டியல் சிறப்புப் பாா்வையாளரும், நிலச் சீா்திருத்தம் மற்றும் நகா்ப்புற நில உச்ச வரம்பு, நகா்ப்புற நிலவரி ஆணையருமான பி. மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. அப்துல் ராசிக் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் திருத்தப்பணிகள், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு, புதிய வாக்காளா்களை சோ்ப்பது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்ட சிறப்புப் பாா்வையாளா் மகேஷ்வரி, சுருக்கத் திருத்தப் பணிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், புதிய வாக்காளா்களை சோ்ப்பதற்கான செயல் திட்டங்கள், சிறப்பு முகாம்களை பளனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துதல் குறித்து அறிவுரை வழங்கி, புதிய வாக்காளா்கள் விடுபாடின்றி சோ்க்க வேண்டும் என வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் உள்ளிட்ட தோ்தல் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா அனிதா (பெரம்பலூா்), என். சக்திவேல் (குன்னம்), தோ்தல் வட்டாட்சியா் அருளானந்தம் உள்பட வட்டாட்சியா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

