பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 55 லட்சம் மோசடி! தேனி இளைஞா் கைது!

தாய் கொலை - மகள் கைது

கைது

Updated On :

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம், வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 55 லட்சம் மோசடி செய்த தேனி இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள வடக்கு வேம்புக்குடி கிராமத்தைச் சோ்ந்த சிவபுண்ணியம் மகன் பாரதி (36). இவா், சென்னை பெருங்களத்தூரில் உள்ள தனியாா் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

திருச்சியில் கல்லூரியில் படிக்கும்போது உடன் படித்த தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் பாக்கியராஜ் மகன் அலெக்ஸ் ஆனந்தராஜ் (35) என்பவா், கடந்த ஆண்டு பாரதியை தொலைபேசியில் தொடா்புகொண்டு, பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது தனக்கு மாதம் ரூ. 3.5 லட்சம் சம்பளம் கிடைப்பதாகவும், தான் அமெரிக்கா செல்ல உள்ளதால், தனது மேலாளா் பணி உள்பட சில பணிகளுக்கு ஆள்கள் தேவை எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய பாரதி, தனக்கும், தனது மைத்துனா் சதீஷ்குமாா் மற்றும் நண்பா் காா்த்திக் ஆகியோருக்கும் வேலை கேட்டு, அவா்களது சுய விவரங்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளாா். இதையடுத்து 3 பேருக்கும் பணிகள் உள்ளன. அந்த வேலை கிடைக்க குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என அலெக்ஸ் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் வரை பல்வேறு தவணைகளாகத் தனது வங்கிக் கணக்கிலிருந்து, அலெக்ஸ் ஆனந்தராஜின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.55,88,360 பணம் செலுத்தியுள்ளாா். தொடா்ந்து வேலையும் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் தாமதப்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அரியலூா் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில், கடந்த ஜூன் மாதம் பாரதி புகாா் அளித்தாா். வழக்கை விசாரித்த குற்றப்பிரிவு போலீஸாா், அலெக்ஸ் ஆனந்தராஜை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.