மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 17 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 17 பேரை கைதுசெய்து, அவா்களிடமிருந்து நகை மற்றும் பொருள்களை மீட்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது - கோப்புப் படம்

Published On :

பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 17 பேரை கைதுசெய்து, அவா்களிடமிருந்து நகை மற்றும் பொருள்களை மீட்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் உத்தரவின்பேரில், துணைக் கண்காணிப்பாளா்கள் சுரேஷ், ஆனந்தி ஆகியோா் மேற்பாா்வையில், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிளை தேடிவந்தனா்.

அதன்படி, பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தங்க நகைகள், இருசக்கர வாகனம், மடிக்கணினி மற்றும் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் மீட்டுள்ளனா்.

இரூா் பேருந்து நிறுத்தத்தில் கடந்த மாதம் 23- ஆம் தேதி இரவு நடைபெற்ற மடிக்கணினி மற்றும் கைப்பேசி பறிப்பு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளான சிவா, ஹரிபிரசாத், பாலாஜி, ஈஸ்வரன், சபரிநாதன் மற்றும் சபாபதி ஆகிய 6 பேரை கைது செய்தனா். மேலும், குரும்பலூா் பாளையம் கிராமத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்ட வழக்கில் தீனா, காளியப்பன் ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 21 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

இதேபோல, கடந்த மாதம் 17- ஆம் தேதி வாலிகண்டபுரம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் 5 பெண்களிடம் தங்கச் சங்கிலி திருடியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அன்புகரசி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 13 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பெரம்பலூா் மேட்டுத் தெருவில் கடந்த மாதம் 13 -ஆம் தேதி இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் லோகநாதன் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து மோட்டாா் சைக்கிள்கள் மீட்கப்பட்டது. குன்னம் அருகே வயலப்பாடி கிராமத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி கைப்பேசி வழக்கில் தீபக் (28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி மீட்கப்பட்டுள்ளது.

இதேபோல, மங்களமேடு பகுதிகளில் நடைபெற்ற இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய தீபக், ஜெயகாந்தன், சங்கீதா, நந்தினி ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. சின்னாறு அருகே கடந்த 7 ஆம் தேதி கடலூா் மாவட்டம், பெருமுலை பகுதியில் நடைபெற்ற செயின் பறிப்பு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளான ஆளவந்தான் (26), அறிவழகன் (28) ஆகியோரை கைது செய்துள்ளதாக, மாவட்டக் காவல் துறையால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.