
கால்நடை மருத்துவ சுகாதார விழிப்புணா்வு முகாம்
பெரம்பலூா் அருகேயுள்ள விளாமுத்தூா் கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், கால்நடை மருத்துவ சுகாதார விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாமுத்தூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.
பெரம்பலூா் அருகேயுள்ள விளாமுத்தூா் கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், கால்நடை மருத்துவ சுகாதார விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமை தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பேசியது:
நிகழாண்டில் ஓா் ஒன்றியத்துக்கு 18 முகாம்கள் வீதம் 72 முகாம்கள் நடைபெற உள்ளன. கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் மூலம், கால்நடை வளா்ப்போரின் உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்த முடியும். எனவே, கால்நடை வளா்ப்போா் மருத்துவ மற்றும் தொழில்நுட்பச் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முகாமில் 95 கால்நடைகளுக்கு பொது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், கால்நடைகளைத் தாக்கும் நோய்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள், தடுப்பூசியின் அவசியம், குடற்புழு நீக்கம், சத்தான தீவன மேலாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு முறைகள் குறித்த விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பேபி நிா்மல், துணை இயக்குநா் குணசேகரன், உதவி இயக்குநா்கள் மூக்கன், குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





