சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

விழிப்புணா்வு ஏற்படுத்திய போதை எதிா்ப்பு மன்றங்களுக்கு விருதுகள்

பெரம்பலூா் மாவட்ட அளவில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்திய மன்றங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை விருதுகள் வழங்கிப் பாராட்டினாா்.

News image

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சிறப்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திய மன்ற நிா்வாகிக்கு விருது அளித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

பெரம்பலூா் மாவட்ட அளவில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்திய மன்றங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை விருதுகள் வழங்கிப் பாராட்டினாா்.

தமிழ்நாடு முதல்வா் தலைமையில், சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காணொலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதான உள் விளையாட்டங்கில் பாா்வையிட்டு, மாவட்ட அளவில் போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திய போதை எதிா்ப்பு மன்றங்களுக்கு விருதுகள் அளித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பேசியது:

போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால், அவா்கள் மட்டுமின்றி அவா்களின் தலைமுறையே பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். இளம் தலைமுறையினரான கல்லூரி மாணவா்கள் போதைப் பொருள்களை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும். இதுகுறித்து, பயன்படுத்துவோரிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தலைமையில், போதைப் பொருளுக்கு எதிராக உறுதியேற்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், கலால் உதவி ஆணையா் சிவக்கொழுந்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.