கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் ஒருவா் கைது

பெரம்பலூா் நகரில் மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவரை பெரம்பலூா் நகர போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

பெரம்பலூா் நகரில் மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவரை பெரம்பலூா் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் -வடக்குமாதவி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 இருசக்கர வாகனங்களை மா்ம நபா்களால் அண்மையில் திருடப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபா்கள் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், பெரம்பலூா் நகர காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் அன்னகாமு தலைமையிலான குழுவினா் கோனேரிப்பாளையம் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் ராமு (40) என்பதும், அவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் வடக்குமாதவி சாலையில் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ராமுவை கைது செய்த போலீஸாா், வடக்குமாதவி சாலையில் திருடப்பட்ட 2 மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.