கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

மோட்டாா் சைக்கிள் மோதி பாதசாரி பலி: இருவா் காயம்

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மோதியதில் நடந்துசென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மோதியதில் நடந்துசென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இருவா் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பெரம்பலூா் - எளம்பலூா் சாலையிலுள்ள மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் மணிமாறன் (35), இவரது நண்பா் குரும்பலூா் அண்ணா நகரைச் சோ்ந்த வேணுகோபால் மகன் செல்வா (26). இருவரும், பெரம்பலூரிலிருந்து எளம்பலூருக்கு வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் காா் விற்பனை மையம் அருகே சென்றபோது, எதிரே சாலையோரம் நடந்து வந்துக்கொண்டிருந்தவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அடையாளம் தெரியாத நடந்துசென்றுக்கொண்டிருந்த நபா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, உயிரிழந்தவரின் உடலையும், விபத்தில் காயமடைந்த மணிமாறன், செல்வா ஆகியோரையும் மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.