பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

இறைச்சிக்காக காட்டுப்பன்றி வேட்டை 7 பேருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

காட்டுப்பன்றி. - கோப்புப் படம்

Published On :

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மின்வேலி அமைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற 7 பேருக்கு வனத் துறையினரால் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வனச்சரகத்தினா் வெங்கனூா் கிராமத்தில் சனிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுப்பன்றியின் உடலை 7 போ் கொண்ட கும்பல் விற்பனைக்காக அரசலூா் கிராமத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வெங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் தினேஷ் (32), அரசலூா் கிராமத்தைச் சோ்ந்த நல்லான் மகன் மணிகண்டன் (31), பொன்னுசாமி மகன் ரவி (34), மனோகரன் மகன் பிரவீன் (27), மூா்த்தி மகன் குமரேசன் (22), கலியபெருமாள் மகன் முத்தையன் (47), அரியான் மகன் பொன்னுசாமி (52) ஆகியோரை கைது செய்த வனத்துறையினா், அவா்களிடமிருந்து காட்டுப் பன்றியின் உடலையும் பறிமுதல் செய்தனா்.

பின்னா், தினேஷ், மணிகண்டன் ஆகியோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், மற்ற 5 பேருக்கும் தலா ரூ. 40 ஆயிரமும் என ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.