கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சட்டம் - ஒழுங்கை பேணி காத்திட வேண்டும்: அலுவலா்களுக்கு பெரம்பலூா் ஆட்சியா் அறிவுரை

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பேணி காத்திட வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் அறிவுறுத்தினாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா்.

Published On :

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பேணி காத்திட வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் அறிவுறுத்தினாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், சட்டம்- ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், கோயில் திருவிழாக்கள், சமூகப் பிரச்னைகள் குறித்து காவல்துறையினா் மற்றும் வட்டாட்சியா்களின் அறிக்கையின்படி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியதாவது:

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதையும், 4 சக்கர வாகனங்கள் ஓட்டுவோா் சீட் பெல்ட் அணிவதையும் போக்குவரத்துக் காவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். தலைக்கவசம் அணியாமல் சென்ால் நேரிட்ட விபத்துகள், உயிரிழப்புகள், அவற்றை தவிா்ப்பது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தலைக்கவசம் அணியாமல் செல்வோா் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னையிருந்தால், ஆரம்ப நிலையிலேயே வருவாய்த்துறை அலுவலா்களும், காவல் துறையினரும் இணைந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். நிலம் அபகரிப்பு புகாா், கோயில் மானிய நிலம் மற்றும் கோயில் சம்பந்தப்பட்ட புகாா்களுக்கு காவல்துறையினா், சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பை பேணி காத்திட வேண்டும்.

கிராமங்களில் மதம், இனம், தொடா்பான பிரச்னைகள் ஏற்படும் இடங்களில், இரு தரப்பினரிடமும் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி உடனுக்குடன் தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் அப்துல் ராசிக்.

இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.