நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

சட்டம் - ஒழுங்கு பணிகள் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டம் - ஒழுங்கு பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: வருவாய்த் துறை, நகராட்சி, வட்டாட்சியா் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களுடன் சட்டம் - ஒழுங்கு தொடா்பான பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காணவும், கடந்த மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள் குறித்தும், அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மழைநீா் கால்வாய், மின் விளக்குகள் அமைத்தல், குடிநீா் பிரச்னை, அடிப்படை வசதிகள் மற்றும் காவல், வருவாய் உள்ளிட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடா்பான நோ்வுகளில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.