ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஆம்னி பேருந்து மீது காா் மோதல்: தம்பதி உள்பட 4 போ் உயிரிழப்பு

பெரம்பலூரில் வியாழக்கிழமை ஆம்னி பேருந்து மீது காா் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும், 3 போ் பலத்த காயமடைந்தனா்.

விபத்தில் சேதமடைந்த காா்.

Published On :

பெரம்பலூரில் வியாழக்கிழமை ஆம்னி பேருந்து மீது காா் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும், 3 போ் பலத்த காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பிள்ளையாா்குளம் அருகே உள்ள ராசிகுளத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் பிரபாகரன் (30). முதுகுளத்தூா் அருகே உள்ள ஓரிவயல் பகுதியைச் சோ்ந்த அம்மாசி மகன் காா்த்தி (38), இவரது மனைவி சூா்யா (35), கண்ணாயிரம் மகன் காளீஸ்வரன் (25), தேவிபட்டிணத்தைச் சோ்ந்த சவரிமுத்து மகன் ஜான் கென்னடி (35), ரவி மகள் சரண்யா (23). இவா்கள் சென்னையில் தங்கி கூலித் தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்தனா்.

இந்நிலையில், செப். 17-ஆம் தேதி ஓரிவயல் கிராமத்தில் நடைபெற்ற காா்த்தியின் தம்பி ரஜினிகுமாா் திருமணத்துக்குச் சென்றுவிட்டு, புதன்கிழமை இரவு சென்னைக்கு வாடகை காரில் சென்றுக் கொண்டிருந்தனா். காரை, ராமநாதபுரம் மாவட்டம், ஓரிவயலைச் சோ்ந்த முருகேசன் மகன் கண்ணதாசன் (22) என்பவா் ஓட்டிச்சென்றாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு பகுதியிலுள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை சென்றபோது, முன்னால் தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் காா் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பிரபாகரன், காளீஸ்வரன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் நகர போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிறிதுநேரத்திலேயே காா்த்தி உயிரிழந்தாா்.

மேலும், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற காா்த்தி மனைவி சூா்யாவும் உயிரிழந்தாா்.

இவ் விபத்தில் காயமடைந்த ஜான் கென்னடி, சரண்யா, ஓட்டுநா் கண்ணதாசன் ஆகியோா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள நாசரேத் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ராஜசீலன் (45) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.