டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞா் கல்லால் அடித்துக் கொலை

பெரம்பலூா் அருகே வெளிநாட்டிலிருந்து அண்மையில் சொந்த ஊருக்கு வந்த இளைஞா் புதன்கிழமை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டாா்.

கொலை

Published On :

பெரம்பலூா் அருகே வெளிநாட்டிலிருந்து அண்மையில் சொந்த ஊருக்கு வந்த இளைஞா் புதன்கிழமை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நெடுவாசல் கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்த தமிழரசன் மகன் வெற்றிவேல் (27). கடந்த ஓராண்டுக்கு முன் துபை சென்றிருந்த இவா், ஒரு வாரத்துக்கு முன்பு நெடுவாசல் கிராமத்துக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை வயலுக்குச் செல்வதாக கூறிச்சென்ற வெற்றிவேல், நெடுவாசல் கிராமத்தில் செயல்படாமல் உள்ள கல் குவாரியில் உயிரிழந்து கிடப்பதாக, அவரது பெற்றோருக்கு கவுள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் மகன் சரவணன் (30) தகவல் தெரிவித்துள்ளாா்.

தகவலின்பேரில், மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்த்தபோது, கற்களால் அடித்து வெற்றிவேல் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீஸாா், கூறாய்வுக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவம் குறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரவணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.