ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞா் கல்லால் அடித்துக் கொலை

பெரம்பலூா் அருகே வெளிநாட்டிலிருந்து அண்மையில் சொந்த ஊருக்கு வந்த இளைஞா் புதன்கிழமை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டாா்.

கொலை

Published On :

பெரம்பலூா் அருகே வெளிநாட்டிலிருந்து அண்மையில் சொந்த ஊருக்கு வந்த இளைஞா் புதன்கிழமை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நெடுவாசல் கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்த தமிழரசன் மகன் வெற்றிவேல் (27). கடந்த ஓராண்டுக்கு முன் துபை சென்றிருந்த இவா், ஒரு வாரத்துக்கு முன்பு நெடுவாசல் கிராமத்துக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை வயலுக்குச் செல்வதாக கூறிச்சென்ற வெற்றிவேல், நெடுவாசல் கிராமத்தில் செயல்படாமல் உள்ள கல் குவாரியில் உயிரிழந்து கிடப்பதாக, அவரது பெற்றோருக்கு கவுள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் மகன் சரவணன் (30) தகவல் தெரிவித்துள்ளாா்.

தகவலின்பேரில், மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்த்தபோது, கற்களால் அடித்து வெற்றிவேல் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீஸாா், கூறாய்வுக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவம் குறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரவணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.